இந்திய நாடு உலக அளவில் மக்கள் தொகை அடிப்படையில் இரண்டாவது இடத்தில் உள்ளது.
மேலும் பரப்பளவின் அடிப்படையில் பார்த்தால் ஏழாவது இடத்தில் உள்ளது. பொருளாதார அடிப்படையில் பார்த்தால் இந்திய நாடானது வளர்ந்துவரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது.
அறிவியல், தொழில்நுட்பம், பொருளாதாரம், மருத்துவம் என அனைத்துத் துறைகளிலும் இந்தியா முன்னேறி வருகின்றது.
இந்தநிலையில் ஐ.நா. ஆய்வறிக்கை நடத்தியுள்ளது, இந்த ஆய்வறிக்கையானது பொருளாதாரம், சமூக விவகாரங்கள் என அனைத்தையும் கருத்தில் கொண்டு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
உக்ரைன் போர் உலக நாடுகளில் பெரிய அளவில் பொருளாதார பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது நாம் அறிந்ததே.
ரஷ்யா- உக்ரைன் போர் உலக அளவில் பணவீக்கத்தினை ஏற்படுத்தியுள்ளதால் இந்திய பொருளாதாரம் கடந்த ஆண்டு 8.8 சதவீதம் வளர்ச்சியினைக் கண்டுள்ளது.
இந்த ஆண்டு இந்திய பொருளாதார வளர்ச்சியானது 6.4 சதவீதமாக இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
பணவீக்கம் ஒருபுறம் இருந்தபோதிலும் பொருளாதாரத்தில் இந்திய அரசு முன்னேறிய நாடுகள் பட்டியலிலேயே இணைந்துள்ளது.