fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள் இலங்கைச் செய்திகள் செய்திகள்

மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பாதுகாப்பு அதிகரிப்பு!

தமிழகத்தின் பாம்பன் பகுதியிலுள்ள மன்னார் வளைகுடா கடற்பகுதியில் பாதுகாப்பை அதிகரிக்க இந்திய கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

பாம்பன் பகுதியிலுள்ள மன்னார் வளைகுடா கடல் பகுதியிலும் தீவுப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.

இதற்காக இந்திய கடற்படையின் அதிவிரைவு ரோந்துப் படகு அப்பகுதிக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா, மஞ்சள், கடல் அட்டைகள் கடத்தப்படுவதுடன், தங்கக் கடத்தலும் இடம்பெறுகிறது.

இவற்றைத் தடுப்பதற்காக இந்திய மாநில உளவுப் பிரிவினர், கடலோர காவல்படையினர், சுங்கத் துறையினர் மற்றும் பொலிஸார் பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல்: விசாரணையில் திடீர் திருப்பம்

World News

இந்தோனேஷியாவில் பாரிய நிலநடுக்கம்! பலர் உயிரிழப்பு

World News

கொரோனா வைரஸ்: சரியான முறையில் கை கழுவுவது எப்படி? (Video)

World News