fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

இந்த ஆண்டும் தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வெயிலின் அதிகமாகவே இருந்து வந்த நிலையில் இந்த ஆண்டும் வெயில் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

     சென்னையில் உள்ள வானிலை ஆய்வு மையம் சார்பாக நேற்று உலக வானிலை தினம் சென்னையில் கொண்டாடினார்கள். டாக்டர் சூரிய சந்திர ராவ் இந்த நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு முன்னிலையாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் இருந்தார். பாலசந்திரன் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு கூறியது.

இந்த ஆண்டும் தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கும் - வானிலை ஆய்வு மையம்

     இந்தியாவில் கடந்த 1980- ம் ஆண்டுக்கு பிறகு கடந்த 2016 –ம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளாக வெப்பம் அதிகமாக இருக்கிறது. அதைப் போல் இந்த ஆண்டும் தமிழகத்தில் வெயில் அதிகமாக இருக்கும் என்று பாலசந்திரன் கூறி உள்ளார். சென்னையில் உலக வானிலை தினத்தை முன்னிட்டு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கண்காட்சியில் காற்றின் வேகத்தை அளக்கும் கருவி மற்றும் கஜா புயல் குறித்து வானிலை படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு இருக்கிறது என்று பாலசந்திரன் கூறினார்.

Related posts

வரகு அரிசி சப்பாத்தி

N N

உடல் நலம் குன்றியவர்களுக்கான பசலைக் கீரை சூப்!!

N N

பலாப்பழ தேங்காய்ப்பால் ஜீஸ்

N N