இந்தியா முழுவதும் கோவாக்சின், கோவிஷில்டு என்னும் தடுப்பூசிகள் ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனாவைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அமலுக்கு வந்துள்ளது.
இன்றைய நாள் கணக்கெடுப்பின்படி இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்தியாவின் கொரோனாத் தொற்று குறித்த விவரங்களைப் பார்க்கலாம். அதாவது இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,545 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
இதுவரை இந்தியாவில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையானது 1,06,25,428 ஆக உள்ளது. இந்தியா முழுவதும் 1,88,688 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும் நேற்று ஒருநாளில் மட்டும் 18,002 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

அதன்படி மொத்தமாக இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,02,83,708 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 163 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனால் மொத்தமாக கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிர் இழந்தோர் எண்ணிக்கை 1,53,032 ஆக உள்ளது.
இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்படும் பணியானது ஒருபுறம் நடைபெறும் நிலையில், மற்றொருபுறம் கொரொனாத் தொற்றும் குறையாமலேயே இருந்து வருகின்றது.