பேஸ்புக் பாவனையாளக்கு முக்கிய எச்சரிக்கை

இன்றைய வாழ்க்கை முறையில் சமூக வலைதளங்களில் பயன்படுத்துவது இன்றியமையாததாகிவிட்டது. நிறுவனத்தின் கருத்துப்படி, உலகளவில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 500கோடி பேர் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் அதன் உண்மை தன்மை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதில் அவற்றில் 300 கோடி போலி கணக்குகள் இருந்ததாகவும் அவை அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதாகவும் பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஒன்றுக்கும் மேல் ஃபேஸ்புக் கணக்கு வைத்துக் கொள்ளுபவர்கள், பழைய அக்கவுண்டை டீ ஆக்டிவேட் செய்யாமல் புதிய ஐடிக்களை உருவாக்குதல் போன்ற செயல்களால் பேஸ்புக் வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

பயன்பாட்டில் இல்லாத மற்றும் தேவையான தகவல்கள் நிரப்பப்படாத ஃபேஸ்புக் கணக்குகள் போலி கணக்குகளாக கருதி நீக்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து பேஸ்புக் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 300 கோடி போலி கணக்குகள் கண்டறியப்பட்டு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.