fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » யாழ். திரையரங்கிற்கு சென்றோருக்கு முக்கிய அறிவிப்பு
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

யாழ். திரையரங்கிற்கு சென்றோருக்கு முக்கிய அறிவிப்பு

யாழ்.நகர் ஹார்கில்ஸ் கட்டிடத்தில் உள்ள திரையரங்குக்கு படம் பார்ப்பதற்காக கடந்த 2 வாரங்களுக்குள் சென்றவர்கள் நோய் அறிகுறிகள் இருப்பின் உடனடியாக தம்மை அடையாளப்படுத்த வேண்டும் என மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

காய்ச்சல், தடிமன், தொண்டை வலி உள்ளிட்ட கொரோனா தொற்றுக்குரிய அறிகுறிகள் இருப்பின் உடனடியாக உங்கள் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியுடன் அல்லது மாகாண சுகாதார திணைக்களத்தின் 24 மணிநேர சேவையான 021 2226666 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பை ஏற்படுத்தி தங்களை அடையாளப்படுத்தவேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

குறித்த திரையரங்கில் பணியாற்றும் ஊழியர்கள் 7 பேருக்கு நேற்றய தினம் தொற்று உறுதியான நிலையில் திரையரங்கு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கையாக திரையரங்குக்கு 2 வாரங்களுக்குள் படம் பார்க்க சென்றவர்களும் தொற்றுக்குள்ளாகியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதனையடுத்து மாகாண சுகாதார பணிப்பாளர் இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார்.

Related posts

சுமந்திரனால் யாழ். மத்திய கல்லூரியில் பெரும் பதற்றம் (Photos)

World News

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காலமானார்

World News

நரேந்திர மோடி இன்று இலங்கை வருகிறார்!

TamilTwin