யாழ்.அனலைதீவில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள கடலட்டைப் பண்ணைகளுக்கு எதிராக நாளை வெள்ளிக்கிழமை(02.12.2022) காலை-8 மணியளவில் அனலைதீவு இறங்குதுறையில் அனலைதீவு மக்களால் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட உள்ளது.
மேற்படி கவனயீர்ப்புப் போராட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு போராட்ட ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதேவேளை, கடந்த நான்கு நாட்களாக அனலைதீவுப் பகுதி மீனவர்கள் தொழில் நிறுத்தப் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)