அறிவியலின் அதீத வளர்ச்சியால் இருக்கும் இடத்தில் இருந்தவாறே நாம் நினைத்த அனைத்தையும் செய்து முடிக்கிறோம். சமையல், கல்வி, உடற் பயிற்சி, மருத்துவம் என எந்தவொரு விஷயத்தையும் தெரிந்து கொள்கிறோம்.
ஆனால் இத்தகைய அறிவியல் மற்றொரு புறம் இளம் சமுதாயத்தைச் சீரழிக்கும் வகையிலான பல விஷயங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. அறிவியலின் மாபெரும் கண்டுபிடிப்பான இணையம் குறித்துத் தான் பார்க்கப் போகிறோம்.
இணையத்தில் ஆட்சேபத்திற்கு உள்ளாகும் தகவல்களைத் தேடினால் போலீசாரால் கைது செய்யப்படலாம் என்ற செய்தி உங்களுக்குத் தெரியுமா?
அந்தரங்கத் தகவல்கள், வெடிகுண்டு தயாரித்தல், ஆட்கடத்தல், கருக் கலைப்பு, கொலை செய்யத் திட்டமிடுதல், போதை பொருள் சார்ந்த விஷயங்கள் என்பது போன்ற விஷயங்களைத் தேடினால் காவல் துறையின் கண்காணிப்பில் நிச்சயம் மாட்டுவர் என்று சைபர் க்ரைம் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஐபி அட்ரஸைக் கொண்டு கையும் களவுமாகப் பிடித்து விடுவார்களாம் சைபர் க்ரைம் போலீசார்.