fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களைப் பேசினால் நாமும் 6,000 முஸ்லிம்கள் பற்றிக் கேட்போம்

தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என கூறி , எமது அரசாங்கத்திற்கு நெருக்கடி தந்தால், புலிகளால் கடத்தப்பட்டவர்களை நாமும் கேட்போம் என கூறியுள்ளார் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை இணைப்பாளர் அஹமட் புர்க்கான்.

அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி, உறவுகள் வெளிநாட்டில் உள்ளனர் என்றால் தொடர்புகளை ஏற்படுத்தி தாருங்கள் என கெஹலிய ரம்புக்வெலவின் கருத்திற்கு கல்முனையில் பதிலடி கொடுத்ததையடுத்து, கோட்டா அரசின் கவனத்தை ஈர்க்க அஹமட் புர்க்கான் இதனை தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவின் கல்முனை மத்திய குழு இன்று(18 ஒக்டோபர்) ஏற்பாடு செய்த செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு கூறினார்.

மேலும், காணாமல் ஆக்கப்பட்டோர் அனைவரும் வெளிநாட்டில் வாழ்கின்றனர். அவர்கள் சட்டவிரோதமாக படகில் சென்றுள்ளனர். எமது 6,000 முஸ்லிம்களை புலிகள் கடத்தினார்கள். இனியும் தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என பேசி, எமது அரசாங்கத்திற்கு நெருக்கடி தந்தால், புலிகளால் கடத்தப்பட்டவர்களை நாமும் கேட்போம் என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவரைப் பலியெடுத்த மண் மேடு: நுவரெலியாவில் பெரும் சோகம்!! (Photos)

TamilTwin

நாட்டில் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு!

SL News

யாழில் கொரோனா பரிசோதனை: ஐவருக்குத் உறுதியானது தொற்று!

N N