fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

பிரதமர் மோடி வழியில் பெண்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் – வானதி சீனிவாசன் பேட்டி!!

பாஜக கட்சியில் மிகவும் முக்கியத் தலைவராக இருப்பவர் வானதி சீனிவாசன். வானதி சீனிவாசன் வழக்கறிஞராகப் பணியாற்றியுள்ளார், மேலும் அவர் பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு பிரிவில் துணைத் தலைவராகவும், பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் அவர் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக நேற்று முன் தினம் அதிகாரப் பூர்வத் தகவல் வெளியானது.

பிரதமர் மோடி வழியில் பெண்களின் வளர்ச்சிக்காக பாடுபடுவேன் - வானதி சீனிவாசன் பேட்டி!!

வானதி சீனிவாசனின் நியமனத்திற்கு பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் எனப் பலரும் தங்களது வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

மேலும் இந்த நியமனம் குறித்து கோயம்புத்தூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர், மேலும் அங்குள்ள மக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

வானதி சீனிவாசன் நியமனம் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளதாவது, “பாஜக ஆட்சியினைப் பொறுத்தவரையில்  தொண்டர்கள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரை என அனைவருக்கும் மரியாதையினை பா.ஜ.க. வழங்கி வருகின்றது.

மேலும் பெண்களின் முன்னேற்றத்திற்கு பாஜக ஆட்சியில் கொடுக்கும் முக்கியத்துவத்தைப் போல் மற்ற ஆட்சியில் கொடுப்பதில்லை. நானும் பாஜக தலைவர் மோடி வழியில் பெண்களின் வளர்ச்சி, முன்னேற்றம் போன்றவற்றிற்காக பாடுபடுவேன். உண்மையில் எனக்கு கிடைத்த வாய்ப்பிற்கு நன்றி” என்று கூறியுள்ளார்.

Related posts

12 ஆவதாக ஆண் குழந்தை பெற்ற 11 பெண் குழந்தைகளின் தாய்!!

World News

ஊரடங்கு காலத்தை வெட்டியாக கழிக்காமல் கிணறு வெட்டிய கணவன்- மனைவி

World News

18 நாட்கள் வென்டிலேட்டர்! கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீண்ட 4 மாத குழந்தை

World News