fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

அப்பாவின் அரசியல் பயணத்தில் எப்போதும் உடனிருப்பேன்-ஸ்ருதிஹாசன் பேட்டி

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வந்த இவர் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெறும் மூன்று தமிழ் படங்கள் மட்டுமே நடித்துள்ளார். தற்போது படங்கள் நடிப்பதை தள்ளிவைத்துவிட்டு அவரே பாடல் எழுதி இசையமைத்து வருகிறார்.

     இந்நிலையில் சமீபத்தில் பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்தார்; அதில், படங்களில் நடிக்க வில்லை என்றாலும் எப்போதும் நான் பிஸியாகவே இருக்கிறேன். இசை பணிகள் முடிந்த பின் மீண்டும் நடிப்பேன். தொடர்ந்து 10 வருடங்களாக நடித்து விட்டதால், ஒரு சிறிய பிரேக் எடுத்து கொண்டேன். எனது தந்தை கமல்ஹாசன் அரசியலுக்கு வந்ததையடுத்து எனக்கும் அரசியல் மீது ஆர்வம் ஏற்பட்டு உள்ளது.

அப்பாவின் அரசியல் பயணத்தில் எப்போதும் உடனிருப்பேன்-ஸ்ருதிஹாசன் பேட்டி

     இப்போது நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை ஆழமாக உற்று பார்க்கிறேன். அப்பாவுக்கு அரசியலில் ஆதரவாக இருப்பேன். ஆனால் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதற்கு எனக்கு அனுபவமும், முதிர்ச்சியும் இல்லை. ஆனால் எனது தந்தை மாதிரி ஆட்கள் அரசியலுக்கு வருவது மிகவும் அவசியம். அவருக்கு சமூக பிரச்சினைகளில் நல்ல தெளிவு இருக்கிறது. இளைஞர்கள், பெரியவர்கள் யாராக இருந்தாலும் சரி ஒரு புதிய மாற்றத்துக்காக ஓட்டுப்போட வேண்டும் என்பது தான் எனது கருத்து என்று கூறியுள்ளார்.

Related posts

ஏழு விருதுகளை தட்டி சென்ற ‘1917’ திரைப்படம்! குவியும் பாராட்டுகள்

TamilTwin India

தமிழ் திரைப்பட பிரபலம் இறந்ததாக இணையத்தில் வெளியான பொய்யான தகவல் !

TamilTwin India

அஸ்வின் சரவணன் இயக்கத்தில் சமந்தா

TamilTwin India