fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

நிக்கி கல்ராணியை பார்த்து தான் பல படங்கள் நடிக்க வேண்டும் என தோன்றியது – ஜீவா

குளோபல் இன்போடெய்ன்மென்ட் தயாரிப்பு நிறுவனமானது நாடோடிகள், ஈட்டி என பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது. தற்போது இந்நிறுவனம் ‘கீ’படத்தை தயாரித்துள்ளது. இது நிறுவனத்தின் 10 ஆவது தயாரிப்பாகும். கீ படத்தில் ஜீவா, நிக்கி கல்ராணி என பலர் நடித்துள்ளனர். அபிநந்தன்  ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். கீ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

நிக்கி கல்ராணியை பார்த்து தான் பல படங்கள் நடிக்க வேண்டும் என எண்ணம் தோன்றியது ஜீவா

இதில் ஜீவா பேசினார். பேசும்போது நான் வருடத்திற்கு ஒரு படம் தான் நடித்துக் கொண்டிருக்கிறேன். நிக்கி கல்ராணியை பார்த்து தான் நிறைய படங்கள் நடிக்க வேண்டும் என மனதில் தோன்றுகிறது என்றார் ஜீவா. நிக்கி கல்ராணியுடன் நடித்தது எனக்கு மிகவும் சந்தோசமாக இருக்கிறது. படத்தில் வில்லனாக மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூரியா சிறப்பாக நடித்துள்ளார். தற்போதைய டெக்னாலஜியில் வளர்ந்து வரும் பிரச்சனையை கூறும் படமாக கீ படம் அமைந்துள்ளது. படத்தின் காட்சிகள் அனைத்தும் பிரமாண்டமாக அமைந்துள்ளது. படமானது ஏப்ரல் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. உங்கள் அன்பாலும் ஆதரவாலும்  படம் வெற்றி பெறும் என நம்புகிறேன் என்று ஜீவா கூறியிருக்கிறார்.

Related posts

கவுதம் மேனனின் கிராமத்து கதை, ஆச்சரியத்துடன் பார்க்கும் ரசிகர்கள்.!!

TamilTwin India

திருமணம் செய்துகொள்ளப் போவதாக பிரபல கவர்ச்சி நடிகை சுபா புஞ்சா அறிவிப்பு ..!

TamilTwin India

விக்ரம் 58 இல் இணைந்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார்!!

N N