fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

விஜய் சேதுபதி – எனக்கு நிறைய ஈகோ இருக்கிறது

தமிழ் நடிகரான விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று வெளியான சூப்பர் டீலக்ஸ் பட பேட்டியில் எனக்கு நிறைய ஈகோ இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் சூப்பர் டீலக்ஸ். தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன், சமந்தா, இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் திருநங்கையாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அவர் நடிப்பை பார்த்து ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். பட பேட்டியில் விஜய் சேதுபதியிடம், உங்கள் ரசிகர்களின் பெயர்களைக்கூட நியாபகம் வைத்திருப்பீர்கள். ரசிகர்களிடம் எந்தவித ஈகோவும் பார்க்க மாட்டீர்கள் என்று உங்களைப் பற்றி கருத்து நிலவுகிறது. உண்மையில் உங்களிடம் ஈகோவே கிடையாதா? என்று கேள்வி கேட்டார்கள்.

விஜய் சேதுபதி - எனக்கு நிறைய ஈகோ இருக்கிறது

அதற்கு விஜய் சேதுபதி, என்னிடம் நிறையவே ஈகோ இருக்கிறது. ஆனால், அதை அடையாளம் கண்டு கொள்கிறேன். உண்மையில் ஈகோ இல்லாத மனிதரே இருக்க முடியாது. அதுதான் உங்களை வளர்த்து உயரத்துக் கொண்டு செல்கிறது. ஆனால், ஈகோ அதிகமானால் அதை அடுத்தவர்களிடம் காட்டக்கூடாது. தொழிலில் மட்டுமே அந்த ஈகோவைக் காட்டவேண்டும் என்றார்.

Related posts

”குயின், சூர்ய வம்சம்” புதிய நிகழ்ச்சிகளுடன் களமிறக்குகிறது ஜீ தமிழ்..!!

TamilTwin India

நடிகையை பின்னால் தட்டிய போனிகபூர்

N N

விஜய் தலைமையில் நடைபெற்ற நடிகர் முரளி மகனின் நிச்சயதார்த்தம்!!

N N