Thursday, December 1, 2022
HomeNews and Viewsஇந்தியச் செய்திகள்25 கோடி ஜெயிச்சு என்ன புண்ணியம்.. லாட்டரி அடிச்சும் சொந்த வீட்டுக்குப் போக முடியலயே!

25 கோடி ஜெயிச்சு என்ன புண்ணியம்.. லாட்டரி அடிச்சும் சொந்த வீட்டுக்குப் போக முடியலயே!

ஓணம் பண்டிகையின்போது லாட்டரிச் சீட்டு வெல்வோருக்கு 25 கோடி என கேரள அரசு அறிவித்தது.

திருவனந்தபுரத்தை அடுத்த ஸ்ரீவராகம் பகுதியைச் சார்ந்த அனூப் என்ற கூலித் தொழிலாளிக்கு விழுந்துள்ளது.

ஆட்டோ ஓட்டுவதும் ஹோட்டல்களில் உணவு சப்ளை செய்வதும்தான் இவரது வேலை. கடன் சுமையால் தவித்து வந்த அனூப், ஓணம் பண்டிகை லாட்டரிச் சீட்டினை வாங்கினார்.

அதனைத் தொடர்ந்து அனூப்புக்கு 25 கோடி லாட்டரி விழுந்துள்ளது.

லாட்டரிச் சீட்டு விழுந்து ஒருபுறம் மகிழ்ச்சியில் இருந்தாலும், மற்றொருபுறம் சொந்த வீட்டில்கூட வாழ முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

அதாவது லாட்டரிச் சீட்டு விழுந்ததும் போதும் தூரத்து உறவினர்களில் துவங்கி அக்கம் பக்கத்து வீட்டார், நண்பர்கள் என அனைவரும் 500 ரூபாய் கொடுங்க 1000 ரூபாய் கொடுங்க என்று கடன் கேட்டு வருகின்றனராம்.

இதனால் அவர் வீட்டைவிட்டு வெளியேறி அவரது தங்கை வீட்டில் உள்ளாராம், தங்கை வீட்டில் இருந்தாலும் அனூப்பைத் தேடி அங்கேயும் வருகின்றனராம்.

இதனைத் தொடர்ந்து பெற்ற குழந்தைகளை நேரில் பார்க்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளாராம் அனூப்.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டுப் புலம்பியுள்ளாராம் அனூப்.

RELATED ARTICLES

Most Popular