மனைவியின் அதிர்ச்சி செயலை வீடியோ எடுத்து ரசித்த கணவன்

ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு சமீபத்தில் திருமணம் நடந்தது. பெண்ணின் நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அந்த பெண் தனது சந்தேகத்திற்குரிய கணவரிடம் தனது நடத்தையை நிரூபிக்க கணவருக்கு முன்னால் தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முடிவு செய்தார். பின்னர், அவரது கணவர் கயிற்றில் தொங்குவதை பதிவு செய்தார்.

தனது மனைவி தற்கொலை செய்துகொள்வதை தடுத்து நிறுத்தாமல், அவர் தூக்கில் தொங்கி துடிதுடித்து உயிரிழக்கும் வரை அதை வீடியோவாக எடுத்த கணவன் குறித்த செய்தி அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, தூக்கில் தொங்கிய அந்தப் பெண்ணின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன், மனைவி தூக்கில் தொங்குவதை வீடியோ எடுத்து ரசித்த கொடூர கணவனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.