தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகை சமந்தா இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் வாழ்க்கை சந்தோஷமாக இருந்த நிலையில் சமந்தாவின் செயல்களைக் கண்டு அவரது கணவர் நாக சைதன்யா கோபப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நட்சத்திர காதல் தம்பதிகளான சமந்தா, நாக சைதன்யா இருவரும் சந்தோஷமாக வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இருந்தாலும் இருவருக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. சமந்தா சமூக வலைதள பக்கங்களில் அதிக ஆர்வம் காட்டுவார். ஆனால் நாக சைதன்யா அப்படி இல்லை. முக்கியமான நேரங்களில் மட்டுமே சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்கிறார். சமந்தாவின் சமூக வலைதள ஆர்வத்தை கண்டு நாகசைதன்யா சில சமயம் கோபப்படுகிறார். இதை பற்றி சமந்தாவிடம் நாகசைதன்யா கூறும்போது, ‘திரையில் தான் நம்மை ரசிகர்கள் பார்க்கிறார்கள். நம் சொந்த வாழ்க்கையையும் படம் பிடித்து சமூக வலைதளங்களில் அவர்கள் பார்க்க வெளியிட வேண்டுமா என்று கேட்கிறார்’.
‘அதற்கு தான் அவர் என் அருகில் இருக்கும்போது இன்ஸ்டாகிராம், டுவிட்டர் எதையும் தொடமாட்டேன்’ என்று கூறி இருக்கிறார் சமந்தா.