
இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தி யாழ். நல்லூர் நல்லை ஆதீனத்திற்கு முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து மேற்கொண்டு வரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இன்று சனிக்கிழமை(06) ஏழாவது நாளாகவும் தொடர்கிறது.
இந்நிலையில் இன்றைய போராட்டத்தில் முற்பகல்-10 மணி முதல் வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும் இணைந்து கொண்டுள்ளனர்.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி வழங்குமாறும், இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துமாறும் இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

(செய்தித்தொகுப்பு மற்றும் காணொளி- எஸ். ரவி)