fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » யாழ்.நல்லூரில் இரண்டாவது நாளாகவும் தொடரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் (Video,Photos)
இலங்கைச் செய்திகள் செய்திகள்

யாழ்.நல்லூரில் இரண்டாவது நாளாகவும் தொடரும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் (Video,Photos)

இலங்கையைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தி நல்லூர்  நல்லை ஆதீனத்திற்கு முன்பாக நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமான சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இன்று திங்கட்கிழமை(01) இரண்டாவது நாளாகவும் இரவு பகலாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஐக்கியநாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் வருடாந்தக் கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இலங்கையைச் சர்வதேச நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தியும், மேற்படி கோரிக்கையை வலியுறுத்தி உலகளாவிய ரீதியில் தற்போது தமிழ்மக்கள் மேற்கொண்டுள்ள அறவழிப் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்கும் முகமாகவும் மேற்படி உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இடம்பெறுகிறது.

இதேவேளை, ஐக்கியநாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் நிறைவேறும் வரை உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தொடரும் எனப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்தனர். 

மேற்படி உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தொடர்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் பல்கலைக்கழக விஞ்ஞானபீட மூன்றாம் வருட மாணவன் ம.தர்சிகன் எமது செய்திச் சேவைக்கு விசேடமாகத் தெரிவித்த கருத்துக்களையும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் நீங்கள் காணலாம். 

(செய்தித்தொகுப்பு காணொளி மற்றும், படங்கள்- எஸ். ரவி) 

Related posts

க.பொ.த. சாதாரண தர பரீட்சைகள் திங்களன்று ஆரம்பம்!

World News

யாழில் இராணுவத்தினர் எனக் கூறி வீட்டினுள் அகழ்வு!

SL News

யாழ். மக்களுக்கு முக்கிய அறிவித்தல்: பல பகுதிகளிலும் இன்று மின்தடை!

N N