ஒரு மனிதனின் ஆரோக்கியத்தைத் தீர்மானிப்பது வாய்தான். வாயை ‘உடலின் நுழைவாயில்’ என்கிறார்கள் மருத்துவர்கள். வாயின் செயல்பாட்டுக்கு பற்களே பிரதானம். பற்களில் ஏற்படும் சிறு பாதிப்பு கூட உடலைப் பாதிக்கும். பல்லாண்டு வாழ பற்களின் ஆரோக்கியம் அவசியம். பற்களைப் பாதுகாக்கும் முறையை பார்க்கலாம்.
நீண்ட நேரம் பற்களுக்கு இடையில் உணவு இருப்பதாலோ சரியாக பல் துலக்காததாலோ பல் சொத்தை ஏற்படும். இதற்கு தீர்வு டூத் ப்ரெஷ்ஷை மெதுவாக ஒவ்வொரு பல்லிலும் ஈரும், பல்லும் சந்திக்கும் இடத்தில் இருந்து துலக்க வேண்டும். பல், வயிறு தொடர்பான பிரச்னைகளால் துர்நாற்றம் ஏற்படலாம். மவுத்வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது என்பது தற்காலிகமான தீர்வு. தினசரி காலை மற்றும் இரவு வேளைகளில் இளஞ்சூடான நீருடன் கல் உப்பு சேர்த்து வாய்க்கொப்பளிக்கவும்.

டீ, காபி, குளிபானங்கள் குடித்தபின்னர் வாயைக் கொப்பளிக்க வேண்டும். குடிக்கும் நீரில் உள்ள ஊட்டச்சத்து குறைபாட்டாலும் பற்களில் கறை உண்டாகலாம். உணவு சாப்பிடும் நேரத்தில் மட்டும் இனிப்பு சாப்பிடவேண்டும். கடினமான பிரஷைத் தவிர்க்க வேண்டும். பிரஷ்ஷை அழுத்திப் பிடித்து பல் துலக்கக் கூடாது. இயற்கையான நல்லெண்ணெயில் வாய் கொப்பளிக்க வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் கொப்பளித்த பிறகு தண்ணீரில் வாய் கொப்பளிக்கலாம்.