Tuesday, August 16, 2022
HomeNews and Viewsஇந்தியச் செய்திகள்5000 பேருக்கு ஹோட்டல் விருந்து.. 100 கிலோ கேக்.. செல்ல நாய் பிறந்தநாளுக்கு இப்படி ஒரு...

5000 பேருக்கு ஹோட்டல் விருந்து.. 100 கிலோ கேக்.. செல்ல நாய் பிறந்தநாளுக்கு இப்படி ஒரு பர்த்டே செலபரேஷனா!

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெலகாவி மாவட்டத்தில் உள்ள துக்காநட்டி என்ற கிராமத்தில் தொழில் அதிபர் ஒருவர் அவரது வளர்ப்பு நாய்க்கு 5000 பேருக்கு விருந்து வைத்து பிரமாண்டமாக பிறந்தநாள் கொண்டாடியுள்ளார்.

துக்காநட்டி என்ற கிராமத்தில் வசிக்கும் தொழில் அதிபர் சிவப்பா மர்தி.

இவர் கிரானைட் பிசினஸ் செய்துவரும் நிலையில் கிராம பஞ்சாயத்து முன்னாள் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

சிவப்பா மர்தி தன்னுடைய வீட்டில் கடந்த ஆண்டு ஒரு நாயை விலைக்கு வாங்கியுள்ளார்.

அந்த நாயின் பெயர் கிரஸ், கிரஸ் வீட்டிற்கு வந்து ஒரு வருடம் ஆன நிலையில் முதல் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு கிராமத்தில் வசிக்கும் அனைவருக்கும் அழைப்பு விடுத்து ஹோட்டலில் இருந்து வகை வகையான உணவுகள் ஆர்டர் செய்யப்பட்டது.

மொத்தம் 5000 பேர் கலந்துகொண்ட கிராண்ட் பர்த்டே செலபரேஷனில் 100 கிலோ எடை கொண்ட கேக்கானது வெட்டப்பட்டது.

கிரஸ் நாய்க்கு மாலை அணிவித்து ஊர்லவமாக அழைத்து சென்றதுடன் கேக் வெட்டி ஊர் முழுக்க கேக் கொடுத்தனர்.

அடுத்து வகை வகையான உணவுகளைப் பரிமாறி கொண்டாடியுள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular