Saturday, June 25, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்எரிபொருள் பிரச்சினையின் எதிரொலி: யாழ்.நகரில் நாளை முதல் குதிரை வண்டி சேவை(Photo)

எரிபொருள் பிரச்சினையின் எதிரொலி: யாழ்.நகரில் நாளை முதல் குதிரை வண்டி சேவை(Photo)

தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினையைக் கருத்திற் கொண்டு பொதுமக்களின் நலன் கருதி யாழ்.நகரில் நாளை வெள்ளிக்கிழமை(24.6.2022) தொடக்கம் குறைந்த செலவில் குதிரை சேவை ஆரம்பமாகிறது.

யாழ்.ஆனைக்கோட்டையைத் தளமாக கொண்டு செயற்படும் புலம்பெயர்ந்து லண்டனில் வாழ்ந்து வரும் மருத்துவ நிபுணர் கே.இ.சந்திரபாலிற்குச் சொந்தமான Chariot Tours நிறுவனம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவிருந்து நோயாளர்கள் மற்றும் போக்குவரத்துக்காக அல்லல்படும் மக்களுக்காக இரண்டு கிலோ மீற்றருக்கு உட்பட்ட பகுதிகளில் இந்தச் சேவையை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளது.

வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய நாட்களில் மேற்படி சேவை இடம்பெறும் எனவும், காலை-8 மணி தொடக்கம் முற்பகல்-11 மணி வரையும், மாலை-3 மணியிலிருந்து 6 மணி வரைக்கும் குதிரை வண்டிச் சேவை இடம்பெறும் எனவும் மேற்படி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.

இன்று முதல் குறித்த சேவை ஆரம்பிக்கப்படும் என முன்னதாகத் தெரிவிக்கப்பட் டிருந்த போதும் தவிர்க்க முடியாத காரணத்தால் பிற்போடப்பட்டு நாளை முதல் இந்த சேவை இடம்பெறும்.

இதேவேளை, குறித்த குதிரை வண்டி சேவையைப் பெற்றுக் கொள்ள விரும்புபவர்கள் 07777865637 அல்லது 0762622236 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular