fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

கூந்தலுக்கான வீட்டு வைத்தியம்

கருமை நிற கூந்தலை விரும்பாத பெண்ணும், வழுக்கை தலையை விரும்பும் ஆணும் இந்த உலகத்தில் இருக்க முடியுமா முடியாது. அதேபோல் கூந்தல் நீளமாக, அடர்த்தியாக, கருமையாக வளர தவம் கிடக்கும் பெண்களுக்கு சில டிப்ஸ். நெல்லிக் காயையும் ஊற வைத்த வெந்தயத்தையும் ஒன்றாகச் சேர்த்து நன்கு அரைத்து அதைத் தலையில் தடவி ஊற வைத்து குளிப்பதால் குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும்.

கூந்தலுக்கான வீட்டு வைத்தியம்

கருமையாக வளர தவம் கிடக்கும் பெண்களுக்கு சில டிப்ஸ். நெல்லிக் காயையும் ஊற வைத்த வெந்தயத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு அரைத்து அதைத் தலையில் தடவி ஊற வைத்து குளிப்பதால் குளிர்ச்சியைத் தரும். கண் எரிச்சலைப் போக்கும்.

விளக்கெண்ணெயைப் போல் குளிர்ச்சி தருவது வேறு எதுவுமே இல்லை. விளக்கெண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன் அதோடு தேங்காய் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்து இலேசாகச் சுடவைத்து முடியோட மயிர்க்கால்களில் நன்றாகப் படும்படி தடவி விடவும். பின் ஒரு பழைய துணியை வெந்நீரில் நனைத்து பிழிந்து, தலையின் மீது சுற்றவும். அந்தச் சூடு உள்ளே இறங்கும். சற்று ஆறியதும் மீண்டும் அவ்வாறு செய்யவும். பிறகு தலையை ஷாம்பூ போட்டு அலசி விடவும். முடி உதிராமல் இருக்க இது ஒரு முத்தான வழி.

கூந்தல் வறண்டு இருந்தால் ஒரு கிண்ணத்தில் மருதாணிப் பொடி, தேங்காய்ப்பால், தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் குழைத்துத் தலையில் நன்றாக தடவி மசாஜ் செய்யவும். பின் அரை மணி நேரம் கழித்துத் தலைக்குக் குளிக்கலாம்.

அங்கங்கே தலையில் சிறு சிறு  பொட்டல் இருந்தால் சிறிய வெங்காயமும், மிளகுப் பொடியும் சேர்த்துத் தடவி ஊற வைத்தால் மீண்டும் அங்கு முடி வளரும்.

பித்தம் உடலில் அதிகமானாலும் நரை ஏற்படும். கசகசாவும், அதிமதுரமும் சம அளவு எடுத்துப் பொடி செய்து பசும் பாலில் குழைத்துத் தலையில் தடவி, ஊறிய பின் குளித்தால் நரை மறைந்து விடும்.

Related posts

முடியானது காடுபோல் வளர இதை மட்டும் செய்தால் போதும்!!

N N

முகத்தின் அழகினைக் கூட்டும் பார்லி பவுடர் மாஸ்க்!!

N N

தலைமுடி உதிர்வினைக் கட்டுக்குள் வைக்கும் உருளைக்கிழங்கு ஹேர்பேக்!!

N N