fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » ஹிஷாலினியை தீ மூட்டிக் கொன்றுவிட்டனர்: பெற்றோர் தெரிவிப்பு (Photo)
இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

ஹிஷாலினியை தீ மூட்டிக் கொன்றுவிட்டனர்: பெற்றோர் தெரிவிப்பு (Photo)

சிறிய தீயைக் கண்டாலே பயப்படும் எமது மகள் தானாகவே தீ மூட்டிக் கொள்ளும் அளவுக்குத் தைரியமானவரல்ல. அவருக்கு யாரேனும் தீ வைத்திருப்பார்கள் என நூறு வீதம் சந்தேகிப்பதாக தீக்காயங்களுடன் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினியின் பெற்றோர் கவலையுடன் தெரிவித்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டு தீக்காயங்களுடன் மரணமான சிறுமி ஹிஷாலினியின் பெற்றோர் கண்டியில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

தங்களின் மகள் தொலைபேசியில் தம்டமுடன் பேசும் போது தன்னை அங்குள்ளவர்கள் தும்புத் தடியால் தாக்குவதாகவும், தன்னால் அங்கு தொடர்ந்தும் இருக்க முடியாது என்பதால் உடனடியாக வந்து அழைத்துச் செல்லுமாறும் ஹிஷாலினி கூறியதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

தொழிலுக்குச் செல்லுமாறு நாம் அவரைப் பலவந்தப்படுத்தவில்லை. அவர் விரும்பியே சென்றார்.

ஆண்களைப் பார்த்தாலே விலகிச் செல்லும் பெண் பிள்ளை அவர். எனது மகள் சிறிய தீயைக் கண்டால் கூட அஞ்சுபவர். நாம் வீட்டில் தீ மூட்டினால் கூட அருகில் இருக்க மாட்டார்.

இவ்வாறு அச்சப்படுவபவர் எவ்வாறு தனக்குத் தானே தீ மூட்டிக் கொள்வார் என்பதில் எமக்குப் பாரிய சந்தேகம் நிலவுகிறது. அவர் தீ மூட்டிக் கொண்டிருக்க மாட்டார். யாரேனும் ஒருவரால் தான் தீ மூட்டப்பட்டிருக்கும் எனவும் அவர்கள் மேலும் மேலும் உறுதிபடக் கூறியுள்ளார்.

Related posts

பயங்கரவாத தடைச் சட்டத்தின் சில விதிகளை மீள ஆராய நடவடிக்கை!

N N

சசிகலா வீட்டை இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீசு

World News

திடீரென வேகமாக பரவி வரும் பூஞ்சை தொற்று நோய்

SL News