fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சோனாலி பிந்த்ரே வாழ்க்கையில் இனி பயமே இல்லை
சினிமா

சோனாலி பிந்த்ரே வாழ்க்கையில் இனி பயமே இல்லை

இந்தியில்  முன்னணி நடிகையாக இருந்த இவர் தமிழில் ‘காதலர் தினம்’என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார். இவருக்கு புற்றுநோய்      ஏற்பட்டு இருந்ததால்     ரசிகர்கள்   பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிறார்கள். தற்போது வெளிநாட்டிற்கு சென்று சிகிச்சை பெற்று குணமாகி இப்போது மீண்டும் வந்து இருக்கிறார். சிகிச்சை பெற்று நலமடைந்ததை சோனாலி பிந்த்ரே  இங்கு சொல்கிறார்.

புற்றுநோயை வந்ததை என்னால் மறைக்க முடியவில்லை. நான்  சமூக வலைத்தளத்தில் வெளியிட்டேன். ஆரோக்கியத்தை உருவாக்கும் எத்தனையோ பொருட்களுக்கு நான் உதவியாக இருந்தேன். ஆனால்  எனக்கு புற்றுநோய் என்றதும் வாழ்க்கை தலைகீழாக ஆனது. எல்லோரும் எனக்கு தைரியம் கொடுத்தனர். இதனால் புற்றுநோயை எதிர்கொள்ள எனக்கு நம்பிக்கை வந்தது என்றார் சோனாலி பிந்த்ரே  . அறுவை சிகிச்சைக்கு பிறகும் கஷ்டப்பட்டேன். எனது உடலில் 20 இடங்களில் ஆபரேஷன் செய்த தழும்புகள்  உள்ளன. நான் மறுபடியும் செய்ய வேண்டிய வேலை இருப்பதால் கடவுள் காப்பாற்றி அனுப்பி இருக்கிறார் என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால் உயிர் போகிற அளவுக்கு போய் திரும்ப வந்து இருக்க மாட்டேன். கடவுள் எதற்காக என்னை மறுபடி உயிர்ப்பித்து  திரும்ப அனுப்பினார் என்ற காரணத்தை கண்டுபிடிப்பேன். என்னுடைய் விளம்பரத்தில் பலவித எண்ணைக்கு விளம்பரம் செய்த நான் எனது தலைமுடியை இழந்து விட்டேன். பழைய முடி எனக்கு இல்லை என்ற ஏக்கம் எனக்கு வருகிறது. ஆனாலும் எனது புருவங்கள் மறுபடியும் வந்து விட்டது. புற்று நோயில் குணமாகி வந்த பிறகு பயம் இல்லாமல் போய் விட்டது. இனி என்னோட  வாழ்க்கையில் பயம் என்பது  இல்லை என்று  சோனாலி பிந்த்ரே கூறினார்.

Related posts

ரசிகரின் குடும்பத்துக்கு ரூ.10லட்சம் நிதி உதவி வழங்கிய ராம்சரண்

TamilTwin India

”போதை மருந்து விவகாரம்” விவேக் ஓபராயின் உறவினர் இடங்களில் சோதனை..!!

TamilTwin India

யூடியூப் சேனலை தொடங்கிய ஸ்ருதி ஹாசன், ரசிகர்களுக்கு வேண்டுகோள்..!

TamilTwin India