நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக மோடி தமிழகத்திற்கு வருகை தந்தார். அங்கு அதிமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் பிரச்சாரத்தின் போது பிரதமர் கூறியதாவது, இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் பிரதமர் தான் தாம் என்றார்.
இலங்கை சிறையில் உள்ள 1900 மீனவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர் எனவும் மேலும் இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு 14000 வீடுகள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் சவுதி அரேபிய இளவரசருடன் பேசி 800 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார் .

மேலும் தமிழ்நாட்டிற்கு வந்து செல்லும் விமானங்களில் தமிழ் அறிவிப்பு இருக்கும் எனவும் கூறினார். மற்றும் சென்னை சென்ட்ரல் இனி பாரத ரத்னா எம்.ஜி.ஆர் ரயில்நிலையம் என்று அழைக்கப்படும் என்றார்.
ஈரோடு முதல் திருச்சி வரை மற்றும் சேலம் முதல் திண்டுக்கல் வரையிலான ரயில்பாதை மின்மயமாக்கப்பட்டு இருக்கிறது, இதனால் அதி விரைவாக ரயிலில் பயணிக்க முடியும் என்றார். இவ்வாறு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பாஜக ஆட்சி தமிழர்களுக்கு வழங்கியுள்ளதை குறிப்பிட்டுச் சொன்னார்.
தமிழ்நாட்டிற்கு பாஜக வே சிறந்த ஆட்சியை கொடுத்துள்ளதாகவும் காங்கிரஸ் அவசர நிலைப் பிரகடனத்தை பல முறை பயன்படுத்தி உள்ளதாகவும் கூறினார்.