Sunday, February 5, 2023
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்யாழில் மீண்டும் கடும் மழை(Photos)

யாழில் மீண்டும் கடும் மழை(Photos)

யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று திங்கட்கிழமை(14.11.2022) மீண்டும் கடும் மழை பொழிந்துள்ளது.

இன்று காலை-8 மணி முதல் சுமார்-20 நிமிடங்களுக்கு மேலாகவும், முற்பகல்-11 மணி முதல் சில நிமிடங்களுக்கும் மாவட்டத்தின் பல பகுதிகளிலும் மழைவீழ்ச்சி பதிவாகி உள்ளது. பின்னர் மதியம் மற்றும் மாலை வேளைகளிலும் கடும் மழையும், இடையிடையே மிதமான மழைவீழ்ச்சியும் பதிவானது.

குறிப்பாக மதியம் மற்றும் மாலை வேளைகளில் பதிவான தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

இதேவேளை, இரண்டு நாட்களின் பின்னர் பதிவான தொடர் மழைவீழ்ச்சியால் தாழ்நிலப் பகுதிகள், பல வீதிகள் மற்றும் வலிகாமம் பகுதியின் பல பகுதிகளிலும் விவசாய நிலங்களில் மழைவெள்ளம் தேங்கி நின்றமையையும் காண முடிந்தது.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular