சத்துக்கள் நிறைந்த தானியங்களைக் கொண்டு செய்யப்பட்டது சத்து மாவு. இதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விருப்பி சாப்பிடுவார்கள். இதனை தினமும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இந்த சத்து மாவு உருண்டை எப்படி செய்யலாம் என்று இங்கு பார்க்கலாம்.
சத்து மாவு உருண்டை – Health Mix

அடுப்பில் வாணலியை வைத்து சத்து மாவை அதில் போட்டு 10 நிமிடம் நன்கு மணம் வெளிவரும் வரை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு மற்றொரு வாணலில் எடுத்து வைத்துள்ள வெல்லம்/கருப்பட்டியை தட்டி போட்டு அதில் 2 ஸ்பூன் தண்ணீர் சேர்த்து அதன் பதத்திற்கு வரும் வரை காய்ச்சி பின்பு அதை குளிர வைக்க வேண்டும். பிறகு வறுத்து வைத்துள்ள சத்து மாவை சேர்த்து அத்துடன் ஏலக்காய் பொடியையும் சேர்த்து கிளறி விடவும். அதில் நெய்யை சூடாக்கி சேர்த்து சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து சாப்பிடவும்.
Ingredients
Instructions