fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » பயணப்பொதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலை களனிகங்கையில்?
இலங்கைச் செய்திகள் செய்திகள்

பயணப்பொதியில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் தலை களனிகங்கையில்?

கொழும்பு டாம் விதியில் வைத்து பயணப் பொதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட யுவதியின் உடலின் தலைப்பகுதி களனிகங்கையில் எறிந்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் தீவிர தேடுதல் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

ஹங்வெல்ல பிரதேசத்தில் உள்ள விடுதியொன்றில் வைத்து இரத்தினபுரி – தெப்பனாவ பகுதியைச் சேர்ந்த 29 வயது யுவதி பொலிஸ் பரிசோதகர் ஒருவரால் கொலை செய்யப்பட்டிருந்தார்.

அவரது தலை அற்ற உடல் அண்மையில் கொழும்பு டாம் வீதியில் வைத்து மீட்கப்பட்டிருந்த நிலையில் சந்தேக நபரும் தற்கொலை செய்துகொண்டிருந்தார்.

இந்நிலையில், யுவதியின் தலைப்பகுதியை சந்தேக நபர் களனி கங்கையில் எறிந்திருக்கலாம் என்கிற சந்தேகத்தில் இன்று(04) மாலை முதல் விசேட பொலிஸ் குழு மற்றும் சுழியோடிகள் அங்கு சென்று தேடுதலில் ஈடுபட்டு வருகின்றதாக கூறப்படுகின்றது.

Related posts

நாட்டை வந்தடைந்தனர் சுற்றுலாப் பயணிகள்!

SL News

மீண்டும் ஆரம்பமானது கொழும்பு- கொச்சின் விமானசேவை!

TamilTwin

மகளின் திருமணத்துக்காக நளினியின் பரோல் மேலும் நீடிப்பு!!

TamilTwin