fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ஹரிஷ் கல்யாணின் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

                பியார் பிரேமா காதல் படத்தினை தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிக்கும் திரைப்படம் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்.  இப்படம் தற்போது ரிலீஸிற்கு தயாரான நிலையில் இருக்கிறது.  இத்திரைப்படம் மார்ச் 15 ரிலீஸாக உள்ளது.  இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படத்தில் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக ஷில்பா மஞ்சுநாத் நடித்து இருக்கிறார்.  இத்திரைப்படத்தினை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கி இருக்கிறார்.  இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் திரைப்படம் பற்றி ஹரிஷ் கல்யாண் கூறியதாவது, “இப்படம் காதலையும், புரிதலையும் எடுத்து சொல்லக் கூடிய படமாக உருவாகி இருக்கிறது.  இப்படத்தில் இடம் பெறக் கூடிய சில சம்பவங்கள் அனைவரது வாழ்விலும் கட்டாயம் நடந்த ஒன்றாக இருக்கும்.  மேலும் இப்படம் இளைய தலைமுறையினர் அனைவரையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. 

ஹரிஷ் கல்யாணின் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்

      இப்படத்தின் கதையினை இயக்குநர் கூறிய உடன் இக்கதாப்பாத்திரம் எனக்கு சவாலாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு தான் படத்திற்கு சரி என்று சொன்னேன்.  இக்கதாபாத்திரத்தில் நடித்து ஓரளவிற்கு வெற்றியும் பெற்று இருக்கிறேன். நடிகை ஷில்பா மஞ்சுநாத் உடன் பணிபுரிந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது” என ஹரிஷ் கல்யாண் கூறி இருக்கிறார்.

Related posts

பழனி முருகன் கோவிலில் நடிகர் தனுஷ் குடும்பத்தினருடன் சாமி தரிசனம்

TamilTwin India

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு டிசம்பரில் தொடக்கம்

N N

காப்பான் படத்திற்கு மீண்டும் வந்த சிக்கல்

N N