fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு தேவையான உணவு முறைகள்
அழகு

ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு தேவையான உணவு முறைகள்

               முடியின் வளர்ச்சிக்கு சந்தையில் விதவிதமான எண்ணெய்கள், ஷாம்பூக்கள் கிடைக்கின்றன. ஆனால் அவை வெளிப்புறப் பராமரிப்புக்கு மட்டுமே உதவும். கூந்தலை உள்ளிருந்து வலிமையாக்காது.  உறுதியான கூந்தலுக்கு விட்டமின் ஏ, சி, இ, பி 5, பி 6, பி 12, இரும்புச்சத்து, துத்தநாகம், புரதம், கொழுப்பு அமிலங்கள் மிக அவசியம். எந்தெந்த உணவுகளை எடுத்துக்கொண்டால் முடி உதிர்வைத் தடுக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

      முட்டையில் உள்ள வெள்ளைப்  பகுதியில் ‘அல்புமின்’என்ற புரதம் கூந்தல் வளர்ச்சியைத் தூண்டுகிறது.  மற்றும் முட்டையில் உள்ள பயோட்டின் என்கிற விட்டமினும் முடி உதிர்வைக் கட்டுபடுத்த உதவுகிறது.

ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு தேவையான உணவு முறைகள்

     முடி உதிர்வைக் கட்டுப்படுத்தக்கூடிய இரும்புச்சத்து பீன்ஸில் அதிகமாக உள்ளது. குறிப்பாக கிட்னி பீன்ஸ், சோயா பீன்ஸ், கறுப்பு பீன்ஸ் ஆகியவை கூந்தல் அடர்த்தியாக வளரச் செய்கிறது.

     ஓட்ஸ்சில் உள்ள விட்டமின் பி-யின் தாது உப்புக்கள் முடி வேகமாகவும் கருமையான நிறத்திலும் வளரத் தேவையான ஆற்றலை வழங்குகிறது.

      கேரட்டில் விட்டமின் ஏ மற்றும் பீட்டாகரோட்டின் சத்துக்கள் உள்ளன. இவை ஆரோக்கியமான முடி வளர்ச்சியைத் தூண்டுகின்றன.

     பாதாம், பீநட்ஸ், வால்நட், முந்திரி ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் முடிக்கு நல்ல ஊட்டச்சத்தைக்  கொடுப்பதோடு முடி உதிர்வையும் கட்டுப்படுத்தும். இவை தோலுக்கு நல்ல நிறத்தையும், முடிக்கு நல்ல பளபளப்பையும் தரக்கூடியவை.

Related posts

முடியை அடர்த்தியாக்க செம்பருத்திப் பூ பேஸ்ட்!!

N N

தலைமுடியினை மென்மையாக்கும் வாழைப்பழ ஹேர்பேக்!!

TT Media

உதட்டை சிவப்பாக்கும் ரோஜா இதழ் பேக்!

TT Media