fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் சின்ன வெங்காயம்

வெங்காயம் சேர்த்தாலே உணவிற்கு ஒரு தனி சுவை கிடைக்கும் என்பது நாம் அறிந்ததே. வெங்காயம் சமையலுக்கு மட்டும் பயன்படுத்தப்படுவது அல்ல, முடி வளர்ச்சிக்கும் இது ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. தலைமுடி உதிர்வதைத் தடுத்து முடியின் வேரை வலுப்படுத்த சின்ன வெங்காயம் பெரிதும் உதவுகிறது.

கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் சின்ன வெங்காயம்

    சின்ன வெங்காயச் சாற்றை தலையில் 5 நிமிடம் மசாஜ் செய்து வருவதால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்கிறது. வெங்காயத்திற்கு  பாக்டீரியாக்களை எதிர்த்து போராடும் தன்மை உள்ளது.  இதை தலை முடியில் பயன்படுத்துவதால் முடி கொட்டுவது தடுக்கப்படுகிறது. முடியின் வேர்கால்களுக்கு ஊட்டச்சத்து கொடுத்து தலை முடி இழந்த ஊட்டச்சத்தை திரும்ப உதவுகிறது. சல்பர் அதிகமாக இருப்பதால் முடி உடைவதையும், அடர்த்தி குறைவதையும் தடுக்கிறது.

     வெங்காயத்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது முடிக்கு பளபளப்பு அதிகமாகிறது. தலை மற்றும் கழுத்து பகுதியில் புற்று நோய் வரும் அபாயத்தை குறைக்கிறது. பேன் தொல்லை குறைகிறது. வெங்காய சாறு பயன்படுத்துவதால் முடியில் அடர்த்தியும்  அதிகரிக்கும். முடி உதிர்வது குறைந்து 4 வாரத்தில் புதிதாக முடி வளரும்.

Related posts

முகச் சுருக்கத்திற்கு பெஸ்ட் ரிசல்ட் வேணுமா? இதை ட்ரை பண்ணுங்க!!

N N

பார்லர் ஸ்டைல் ஹேர் மாஸ்க் செய்யலாம் வாங்க!!

N N

இளநரையைத் தடுக்க சூப்பரான டிப்ஸ்!!!

TamilTwin India