கொய்யா இலை டீ – Guava leaf tea
கொய்யா இலை மற்றும் பழத்தில் மருத்துவ குணங்கள் அதிகமாகவே உள்ளது. கொய்யா இலையில் புரதம், விட்டமின் C, கால்சியம், இரும்பு, போன்ற சத்துகள் அதிகமாக உள்ளதால் உடலில் உள்ள கெட்டகொழுப்பை குறைக்கும் மற்றும் நீரிழிவு பிரச்சனைகளைத் தடுக்கிறது. இந்த இலையை டீ போட்டு பருகலாம். இந்த டீயை வீட்டிலே தயாரிக்கலாம்.

பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் எடுத்து கொண்டு அதை கொதிக்க விடுங்கள். கொதித்து வரும் போது அதில் சிறிதளவு டீத்தூள் மற்றும் எடுத்து வைத்துள்ள கொய்யா இலை போட்டு அதன் பின் ஏலக்காய் சேர்த்து மிதமான தீயில் நன்றாக கொதிக்க விடுங்கள். நன்றாக கொதித்து இலையின் சாறு இறங்கியதும் நாம் வைத்துள்ள நாட்டு சர்க்கரை அல்லது கருப்பட்டி ஏதாவது ஒன்று சேர்த்து கலந்து வடிகட்டி பருகலாம். இதை மூன்று மாதங்கள் குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்கள் குறையும்.
Ingredients
Instructions