பார்வைக்கு மட்டுமின்றி, சமைக்கவும், சுவைக்கவும் அருமையானது பச்சைப் பட்டாணி. எந்த உணவுடனும், கைப்பிடி அளவு பட்டாணி சேர்த்தால் அருமையான சுவைமிகு உணவாக மாறும்.

ஒல்லியாய் இருப்பவர்கள் நாளடைவில் சதைப்பிடிப்புடனும், உடல் வலிவுடனும் வளரப் பச்சைப் பட்டாணியை நன்கு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பச்சைப் பட்டாணியால் உடலுக்குச் சக்தியும் நன்கு கிடைக்கும். நுரையீரலுக்கும், இதயத்திற்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது பச்சைப்பட்டாணி. மனஅழுத்தத்தைக் குறைக்க பச்சைப் பட்டாணி உதவுகிறது. சூடான சாதம், தயிர், சாம்பார் சாதம், சப்பாத்தி, பூரிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பச்சைப் பட்டாணி மசாலா.
குக்கரில் 1 விசில் வரும் வரை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும். ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் அதில் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கியவுடன் தக்காளி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா, மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து வதக்கவும். பின் பட்டாணி சேர்த்து தண்ணீர் விட்டு கொதிக்கவிடவும். கொதித்தவுடன் கொத்தமல்லி தூவிப் பரிமாறவும். இதை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடலாம்.
Ingredients
Instructions