தமிழ்க் கட்சிகளின் கடிதத்துக்கு அரசாங்கம் பதிலடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்க் கட்சிகள் சில இணைந்து, கடிதமொன்றை தயாரித்தது. குறித்த கடிதம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் நேற்று (18) கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், இந்தக் கடிதம் தொடர்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன.

அந்தக் கேள்விகளுக்கு பதிலளித்துகொண்டிருக்கும் அமைச்சர் உதய கம்மன்பில,

“ எம்முடன் பேசாமல் எங்குச் சென்று பேசினாலும் அதில் பலன் இல்லை. இந்தியாவின் ஒரு மாநிலம் இலங்கை இல்லை. இது தனிநாடாகும். ஆகையால், அந்தக் கடிதத்தைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை” என்றார்.