Saturday, June 25, 2022
HomeNews and Viewsஇந்தியச் செய்திகள்எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க 5000 ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு!

எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க 5000 ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு முடிவு!

எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் பொதுவாக தனியார் பள்ளிகளில்தான் உண்டு. அதனால் ஏழை எளிய மக்கள் தங்கள் குழந்தைகளின் ஆரம்ப காலக் கல்வியினை அங்கன் வாடி மையங்களில்தான் துவக்குகின்றனர்.

அங்கன் வாடி மையங்களில் அரசின் சத்தான உணவுடன் ஒரு வயதுக் குழந்தை முதல் 5 வயது வரையிலான குழந்தைகள் படிக்கின்றனர்.

கல்வியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்யும் வகையில் அரசுப் பள்ளிகளிலும் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகள் துவங்கப்பட்டன.

கொரோனா காலத்திற்கு முன் துவங்கப்பட்ட இந்த வகுப்புகள் கொரோனா காலகட்டத்தில் நிறுத்தப்பட்டன.

தற்போது மீண்டும் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளை விரிவுபடுத்த திட்டமிட்டு திறமையான ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி தற்போதைக்கு 5000 ஆசிரியர்களை தொகுப்பூதிய முறையில் பணியமர்த்தத் திட்டமிட்டுள்ளது.

மேலும் இந்த ஆசிரியர் பதவிக்கு டி.டெட் படித்தவர்களை நியமிக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

முதற்கட்டமாக 2500 ஆசிரியர்களைத் தேர்வு செய்யும் பணியில் களம் இறங்கியுள்ளது தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை.

மேலும் அரசு பள்ளிகளின் எல்.கே.ஜி மற்றும் யூ.கே.ஜி வகுப்புகளுக்கான அட்மிஷன் வரும் விஜய தசமியில் துவங்கி நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

RELATED ARTICLES

Most Popular