fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » நயினாதீவு நாக விகாரையில் அரச வெசாக் விழா: யாழில் கலந்துரையாடல் (PHOTOS)
Events-நிகழ்வுகள் இலங்கைச் செய்திகள் செய்திகள்

நயினாதீவு நாக விகாரையில் அரச வெசாக் விழா: யாழில் கலந்துரையாடல் (PHOTOS)

யாழ்ப்பாணம் நயினாதீவு நாகதீப ரஜ மகா விகாரையில் இவ்வருட அரச வெசாக் விழாவை நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

பாரம்பரிய வெசாக் விழாவிலிருந்து மாறுபட்டதாகப் பிற மதங்களுடன் இணைந்து இம்முறை அரச வெசாக் விழாவை நடாத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது 

இது தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்டச்  செயலகத்தில் நேற்றுப்  புதன்கிழமை(03) பிற்பகல் இடம்பெற்றது.

மேற்படி நிகழ்வில் புத்தசாசன அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளும், வடக்கு மாகாண ஆளுநர், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை, வட-கிழக்கு மாகாணங்களில் 65 விகாரைகள், 35 அறநெறிப் பாடசாலைகளை ஒன்றிணைத்து இம்முறை அரச வெசாக் விழாவை யாழில் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரான்சில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: விடுக்கப்பட்ட சிவப்பு எச்சரிக்கை

World News

தமிழரசுக்கட்சியின் வீட்டை விச நாகங்கள் சூழ்ந்துள்ளது! அருந்தவபாலன்

World News

மட்டக்களப்பில் 14 நாள்களில் 248 பேருக்கு டெங்கு

World News