fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

சென்னையில் தங்கம் விலை எதிர்பாராத அளவில் சரிவு!!

பொதுவாக மக்களுக்குத் தெரிந்த மிகச் சிறந்த சேமிப்பாக தங்கத்திலான பொருட்களை வாங்குவதைக் கருதுவர். பொருள், நிலம், வீடு போன்ற முதலீடுகளைக் காட்டிலும் தங்கத்தில் முதலீடு செய்வோர் எப்போதும் அதிகமாகவே இருப்பர்.

அதனால்தான் என்னவோ தங்கத்தின் மீதான மவுசு குறைவதில்லை. மார்கழி மாதங்களில் பொதுவாகத் தங்கம் வாங்குதல் கூடாது என்று சொல்லப்பட்டாலும் நகைக் கடைகளில் விலையானது ஏறுமுகமாகவே இருக்கும்.

சென்னையில் தங்கம் விலை எதிர்பாராத அளவில் சரிவு!!

அதிலும் கொரோனாவால் மக்கள் பொருளாதார நிலையில் ஒருபுறம் அவதிப்பட்டாலும், மறுபுறம் தங்கத்தின் விலை ஏறுமுகமாகச் சென்றது. இந்த நிலையில் கொரோனாத் தொற்று ஒருபுறம் குறையும் நிலையில் தங்கத்தின் விலையும் குறைந்து வருகின்றது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை-  சவரனுக்கு 1464 ரூபாய் குறைவு- தற்போதைய விலை 37 ஆயிரத்து 440 ரூபாய்

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் ஒரு கிராம் விலை- 183 ரூபாய்- தற்போதைய விலை 4 ஆயிரத்து 680 ரூபாய்

Related posts

தென்கொரிய அதிபர் பிரதமர் மூன் ஜே-இனுடன் நரேந்திர மோடி ஆலோசனை

TT Media

18 நாட்கள் வென்டிலேட்டர்! கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மீண்ட 4 மாத குழந்தை

World News

ராஜீவ் படுகொலை வழக்கு – 3 நாடுகளின் பதிலுக்கு காத்திருப்பு

World News