பெண்கள் சுமங்கலி பூஜை, வரலட்சுமி நோன்பு என பல பூஜைகளை குடும்பத்தாருக்காக செய்வதுண்டு.
அந்தவகையில் மகாராஷ்டிராவில் வட் பூர்ணிமா என்ற நாளானது பெண்களால் சிறப்பாக பூஜை வழிபாடுகள் நடத்தி கொண்டாடப்பட்டு வருகின்றது.
பெண்கள் இந்த வழிபாட்டினை தங்கள் கணவரை நினைத்தே வழிபடுகின்றனர். 7 பிறவிக்கும் இதே கணவர் வர வேண்டும் என்று மனதில் கொண்டு ஆலமரத்தை சுற்றி வந்து வழிபாடு செய்கின்றனர்.
பெண்கள் வட் பூர்ணிமாவை ஒருபுறம் கிராண்டாக செலபரேட் செய்ய, ஆண்கள் மற்றொருபுறம் கவனத்தை ஈர்க்கும் வகையில் வழிபாடு செய்தனர்.
அதாவது மனைவியால் பாதிக்கப்பட்ட ஆண்கள் என்று ஒரு குறிப்பிட்ட நபர்கள் சங்கம் வைத்து நடத்துகின்றனர்.
பத்னி பீதித் என்பதுதான் அந்த சங்கத்தின் பெயர். அந்த சங்கத்தினைச் சார்ந்த ஆண்கள் அரசமரத்தை 108 முறை சுற்றிவந்து வேண்டுதல் வைத்துள்ளனர்.
அதாவது தற்போதைய மனைவி மீதமுள்ள எந்தவொரு பிறவியிலும் மனைவியாக வரக்கூடாது என்பதுதான் பிரார்த்தனையின் நோக்கமாம்.
பெண்களுக்கு உள்ள சட்டங்கள்போல் ஆண்களுக்கு குடும்பத்தில் இழைக்கப்படும் அநீதிகளுக்கான சட்டம் எதுவும் இல்லை என்று கூறினர்.
ஆண்கள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பொருட்டே 108 முறை அரசமரத்தினை சுற்றி வந்து வழிபாடு செய்ததாகக் கூறுகின்றனர்.
ஆண்களின் இந்த நூதன வழிபாடு பலரையும் கவர்ந்துள்ளது.