சீனாவில் 12 நாட்களாக செம்மறி ஆடுகள் தொடர்ந்து ஒரே இடத்தில் வட்டமிட்ட படி இருந்த வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சீனாவின் மங்கோலியா பகுதியில் ஹியூ என்பவர் 50 க்கும் மேற்பட்ட ஆடுகளை பட்டியில் அடைத்து வளர்த்து வருகிறார்.
கடந்த வாரம் ஹியூ ஆடுகளை மேய்த்துவிட்டு மாலை பட்டியில் அடைத்துள்ளார். பட்டியில் ஆடுகளை அடைத்துவிட்டு சிறிதுநேரம் கழித்துப் பார்க்கையில் ஆடுகள் ஒரே இடத்தில் வட்டமிடத் துவங்கியுள்ளன.
சில மணி நேரம் இதனை வேடிக்கையாகப் பார்த்துள்ளார் ஹியூ. அதன்பின்னர் மறுநாள் காலை பார்த்தபோதும் ஆடுகள் அதே இடத்தில் வட்டமடித்து இருப்பது அவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த ஒருநாள் மட்டுமல்லாது செம்மறி ஆடுகள் தொடர்ந்து இதேபோல் 12 நாட்கள் வட்டமடித்துள்ளது.
இந்த சம்பவம் மங்கோலியா பகுதியில் தீயாய் பரவ, அனைவரும் இதனைப் பார்த்து வேற்று கிரகவாசிகளின் வேலை என்று கூறி வருகின்றனர்.
ஆனால் மருத்துவர்களோ இது மூளையைப் பாதிக்கும் பாக்டீரியாத் தொற்றுதான் ஏற்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளனர்.
லிஸ்டோரியாசிஸ் என்ற பாக்டீரியாதான் மூளையைப் பொதுவாகப் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.