fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

பூமிகா இப்படி செய்வார் என நினைக்கவில்லை: ரசிகர்கள்

ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பூமிகாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரோஜா கூட்டம், சில்லுனு ஒரு காதல், யூடர்ன் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருப்பவர் பூமிகா. கவர்ச்சியான வேடங்களை விட குடும்ப பாங்கான வேடங்களிலேயே ரசிகர்களைக் கவர்ந்தார். திருமணத்துக்கு பிறகு நடிப்பதைக் குறைத்துக்கொண்ட இவர், தற்போது கனமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் ஒப்புக்கொள்கிறார்.

பூமிகா இப்படி செய்வார் என நினைக்கவில்லை: ரசிகர்கள்

கடந்த சில வாரங்களுக்கு முன் தொடை தெரியும் அளவுக்கு படுகவர்ச்சி உடைகள் அணிந்து போஸ் அளித்ததுடன் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இந்த வயதிலும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பது பற்றி சிலர் அவரை பாராட்டினாலும், கவர்ச்சி காட்டி சீனியர் நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு தேடுகிறீர்களா என ரசிகர்கள் அவரை மிக அதிருப்தியோடு விமர்சித்தனர்.

உங்களின் எளிமையான நடிப்பும், குடும்ப பாங்கான கதாப்பாத்திரங்களும்தான் இத்தனை நாள் ரசிகர்களை கவர்ந்தது இந்தக் கவர்ச்சியை உங்களிடம் சற்றும் எதிர்பார்க்கவில்லை என்று சிலர் பூமிகாவை விமர்சித்தனர். அதைக்கண்டு அதிர்ச்சியான பூமிகா தற்போது உடல் முழுக்க மூடியபடி சுடிதார் அணிந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் தற்போது வெளியிட்டிருக்கிறார்.

Related posts

சமந்தாவை அதிர்ச்சியாக பார்த்த நாக சைதன்யா

N N

ஊரடங்கு உத்தரவால், அப்பாவின் பாசத்தை புரிந்துகொண்டேன் ஸ்ரீதேவி மகள் !

TamilTwin India

தனது பரம்பரை வீட்டை தானமாக கொடுத்த பிரபல பாடகர் ! வெளியான வீடியோ !

TamilTwin India