Friday, February 3, 2023
HomeNews and Viewsஉலகச் செய்திகள்குரங்களால் 9 ஆண்டுகள் வளர்க்கப்பட்ட பெண்.. கொலம்பியாவில் நடந்த அதிசயம்!

குரங்களால் 9 ஆண்டுகள் வளர்க்கப்பட்ட பெண்.. கொலம்பியாவில் நடந்த அதிசயம்!

5 வயது முதல் 14 வயது வரை காட்டில் குரங்குகளால் வளர்க்கப்பட்ட பெண் குறித்த செய்தி வெளியாக அனைவரும் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

கொலம்பியாவைச் சார்ந்தவர் மரினா சாப்ளின், இவருக்கு 5 வயது இருக்கும்போது 2 நபர்கள் இவரைக் கடத்திச் சென்றுள்ளனர்.

கடத்திச் சென்ற நபர்கள் மரினாவைக் காட்டுக்குள் விட்டுச் சென்றுவிட்டனர். மரினாவுக்குக் காட்டுக்குள் இருந்து எப்படித் தப்பிச் செல்வது என்று வழி தெரியவில்லை.

அதனைத் தொடர்ந்து செய்வதறியாது திகைத்து நின்ற மரினாவைக் குரங்கு ஒன்று அருகில் சென்று தொட்டுப் பார்த்துள்ளது.

அதன்பின்னர் சில நிமிடங்கள் நிறைய குரங்குகள் மரினாவைச் சூழ்ந்து கொண்டன, காட்டைவிட்டு வெளியே செல்ல வழி தெரியாததால் குரங்களுடனே வாழத் துவங்கியுள்ளார் மரினா.

9 ஆண்டுகள் குரங்களின் அரவணைப்பில் மரினா வாழ்ந்து வந்துள்ளார். அதன்பின் இவரின் அண்டை வீட்டுக்காரரால் இவர் காட்டில் இருந்து மீட்கப்பட்டு, தத்துக் கொடுப்பட்டுள்ளார்.

தற்போது மரினாவுக்குத் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.  

RELATED ARTICLES

Most Popular