fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

தலைமுடிப் பிரச்சினைகளுக்கு இஞ்சி

தலைமுடிப் பிரச்சினைக்கு இயற்கை வழிகளின் மூலம் தீர்வு கண்டால், பிரச்சினைகள் நீங்குவதோடு, தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும். தலைமுடிப் பிரச்சினைகளுக்கு தீர்வளிக்க  கறிவேப்பிலை, பூண்டு, வெங்காயம் போன்ற சமையலறைப் பொருட்கள் மட்டுமின்றி, இஞ்சியும் பெரிதும் உதவி புரியும்.

தலைமுடி அதிகம் உதிர்ந்தால், ஒரு இஞ்சித் துண்டை நேரடியாக சிறிது நேரம் தேய்க்க வேண்டும். பின் 10-15 நிமிடம் கழித்து தலைமுடியை அலச வேண்டும். இப்படி அடிக்கடி செய்தால், தலைமுடி உதிர்வது  முற்றிலும் நின்றுவிடும். இஞ்சிச் சாற்றில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, ஸ்கால்ப்பில் சுரக்கும் எண்ணெயின் அளவைக்  குறைக்கும் மற்றும் பொடுகு வருவதைப் போக்கும். அதற்கு இஞ்சி சாற்றால் மசாஜ் செய்து அலச வேண்டும்

தலைமுடிப் பிரச்சினைகளுக்கு இஞ்சி

      இஞ்சிச் சாற்றில், சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலையில் தடவி குறைந்தது 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி செய்வதால், தலைமுடியின் பொலிவு அதிகரிக்கும்.  வறண்ட தலைமுடிக்கு இஞ்சிச் சாற்றில் அரகன் எண்ணெய் சேர்த்து கலந்து,  தலைமுடியில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதனால் அதிகப்படியான வறட்சியால் மென்மையின்றி இருக்கும் தலைமுடி மென்மையாகும்.

Related posts

பொடுகை போக்கும் வேப்பிலை- துளசி லோஷன்!!

N N

வறண்ட சருமப் பிரச்சினையா? கவலையே வேண்டாம்

N N

பொடுகினை காணாமல் போகச் செய்யும் வேப்பங்கொழுந்து ஆயில்!!

N N