fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

துருவ் விக்ரமுக்கு தந்தையாக பிரபல இயக்குனர்

தெலுங்கில் வெளியான அர்ஜூன் ரெட்டி படம் தமிழில் ரீமேக் செய்துள்ளார்கள். அந்த படத்திற்கு வர்மா என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் துருவ் விக்ரமுக்கு தந்தையாக பிரபல இயக்குனர் நடிக்க உள்ளார்.

     தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ளார். இந்த படம் எல்லா மாநிலங்களிலும் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இதைத் தொடர்ந்து இப்பொழுது தமிழில் ரீமேக் செய்யப்படுக்கிறது.

துருவ் விக்ரமுக்கு தந்தையாக   பிரபல இயக்குனர் நடிக்கிறார்

     இந்த படம் பாலா இயக்கத்தில் உருவாகி இருந்தது. இதில் துருவ் விக்ரம் நடித்துள்ளார். இந்த படம் மூலம் தயாரிப்பு நிறுவனத்துக்கும், பாலாவுக்கும் இடையே பல பிரச்சினைகள் வந்ததால் இந்தப் படம் கைவிடப்பட்டது. பின்பு வேறு இயக்குனரை வைத்து புதிதாக உருவாக்க இருக்கிறார்கள். அதற்கு பிறகு இந்த படத்தின் பெயர் மாற்றப்பட்டு, படத்தின் பணிகள் விறுவிறுப்பாக  நடந்து வருகிறது.

     இதில் துருவ் விக்ரமின் தந்தையாக யார் நடிப்பதென்று பேச்சுவார்த்தை வந்த நிலையில் இயக்குனர் கவுதம் மேனன் நடிப்பதாக ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக பாலிவுட் நடிகை பனிதா சந்து நடித்துள்ளார். எனவே இந்த படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Related posts

தனுசு ராசி நேயர்களே என்ற படத்தில் ஹரிஷ் கல்யாண்

N N

தீபிகா படுகோன், ரகுல் ப்ரீத் சிங் செல்போன்கள் பறிமுதல், என்சிபி விசாரணை தீவிரம்..!!

TamilTwin India

ரீஎன்ட்ரி கொடுக்கத் தயாரான நடிகை அசின்!!

N N