அடுத்தடுத்த எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் – விசேட தொலைபேசி இலக்கங்கள் அறிவிப்பு

எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் அதுகுறித்த முறைப்பாடுகளை அறிவிக்க பொதுமக்களுக்கு விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட 8 பேரடங்கிய குழுவின் தலைவர் பேராசிரியர் சாந்த வல்பெலகே இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய 0115811927 மற்றும் 0115811929 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினமும் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.