fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

கோஸ் – கொத்தமல்லி சூப்

கோஸ்ஸில் அதிக சத்துக்கள் உள்ளன. இதில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. இவை உடலுக்கு ஊட்டம் தரும் மற்றும் உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது. அதேபோல் கொத்தமல்லி இலையிலும் அதிக சத்துக்கள் உள்ளன. இதை இரண்டையும் சேர்த்து சூப்பாக செய்து சாப்பிடலாம்.

கோஸ் – கொத்தமல்லி சூப் – Garbage coriander soup

கோஸ் - கொத்தமல்லி சூப் - Garbage coriander soup

கோஸ் – கொத்தமல்லி சூப் கோஸ் – கொத்தமல்லி சூப் Print This
Serves: 3 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 grams fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • நறுக்கிய கொத்தமல்லித்தழை - அரை கப்
  • தண்ணீர் – தேவைக்கு
  • துருவிய எலுமிச்சை தோல் - 1 டேபிள்ஸ்பூன்
  • நறுக்கிய முட்டைக்கோஸ் - கால் கப்
  • நறுக்கிய பேபி கார்ன் - 1
  • பட்டாணி - சிறிதளவு
  • கேரட், மிளகாய் - 1
  • உப்பு - தேவைக்கு
  • மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்
  • எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி

Instructions

எடுத்து வைத்து உள்ள பச்சை மிளகாய் மற்றும் கேரட்டை இரண்டையும் நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் போதுமான அளவு தண்ணீர் சேர்த்து, வைத்துள்ள துருவிய எலுமிச்சை தோல், மிளகாய், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை போட்டுக் கொதிக்கவிடவும். நன்கு கொதித்ததும் தண்ணீரை மட்டும் வடிகட்டி எடுத்துக்கொண்டு. வடிகட்டிய தண்ணீரை வாணலியில் ஊற்றி அதனுடன் கேரட், முட்டைக்கோஸ், பட்டாணி, பேபி கார்ன் ஆகியவற்றைக் கொட்டி வேக வைக்கவும். ஓரளவு வெந்ததும் அதனுடன் உப்பு, மிளகுத் தூள், எலுமிச்சை சாறு சேர்த்துப் பருகவும். சத்தான கொத்தமல்லித் தழை சூப் தயார் இதை வீட்டிலே செய்து சாப்பிடலாம்.

 

கோஸ் - கொத்தமல்லி சூப்

Related posts

வீட்டிலேயே குல்பி செய்யலாம் வாங்க!

N N

வித்தியாசமான சிக்கன் பொடிமாஸ்!!

N N

நாவில் எச்சில் ஊறவைக்கும் பக்கோடா குழம்பு!!

N N