fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத் பொருந்தமாட்டார்

ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத் பொருத்தமாக இருப்பார் என்று தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஸ்ரீரெட்டி எதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. அவருக்கு பதிலாக தென்னிந்திய நடிகைகளில் ஒருவரை ஜெயலலிதா வேடத்தில் நடிக்க தேர்வு வேண்டும் என்று கூறியுள்ளார்.

 ஜெயலலிதாவின் வரலாற்றுப் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏ.எல்.விஜய் இயக்குகிற இந்தப் படத்தில் நடிக்க அவருக்கு ரூ.24 கோடி சம்பளம் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழில் தாம்தூம் படத்தில் கங்கனா ரணாவத் நடித்துள்ளார். இந்தியில் குயின் படத்தில் நடித்து தேசிய விருது பெற்றார். இந்த நிலையில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க கங்கனா ரணாவத் பொருத்தமானவர் இல்லை என்று நடிகை ஸ்ரீரெட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது 

ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் பொருந்தமாட்டார்

“ஜெயலலிதா இரும்பு பெண்மணி என்று பெயர் பெற்றவர். ஆட்சியையும், கட்சியையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து இருந்தார். அவருக்கு இணையானவர் யாரும் இல்லை. அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக எடுப்பது மிகவும் முக்கியமானது. எதிர்கால சந்ததியினர் ஜெயலலிதாவை தெரிந்துகொள்ளும் வகையில் இந்த படம் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Related posts

ஆடம்பரம் இல்லாமல் எளிமையாக தனது காதலரை திருமணம் செய்துகொண்ட பெண் இயக்குனர் !

TamilTwin India

எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நலமாக உள்ளார், எஸ்பி சரண் வீடியோ வெளியீடு..!!

TamilTwin India

மீண்டும் இணைந்த எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர்

N N