Tuesday, September 27, 2022
HomeNews and Viewsஉலகச் செய்திகள்திருமணத்துக்கு வராத நண்பர்கள்.. எல்லா சாப்பாடும் வீண். மணப்பெண் மனமுடைந்து எடுத்த விபரீத முடிவு!

திருமணத்துக்கு வராத நண்பர்கள்.. எல்லா சாப்பாடும் வீண். மணப்பெண் மனமுடைந்து எடுத்த விபரீத முடிவு!

சீனாவில் பெண் ஒருவர் தன்னுடைய திருமணத்தின் போது அலுவலக ஊழியர்களால் நடந்த அவமானத்தால் வேலையை ராஜினாமா செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

சீனாவில் உள்ள சிட்னி மாகாணத்தில் வசித்து வருபவர் ஹுசியூன் என்ற பெண், இவருக்கும் இவரின் நெருங்கிய உறவினர் ஒருவருக்கும் திருமண ஏற்பாடு பெற்றோர்களால் செய்யப்பட்டுள்ளது.

இந்தத் திருமணத்திற்கு இவர் தன் அலுவலகத்தில் உடன் பணிபுரியும் சக பணியாளர்கள் 70 பேருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.

அவர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்கள் அனைவருடனும் அன்பு பாராட்டி நெருங்கிய நட்புக் கொண்டு வந்துள்ளார்.

அதனால் திருமணத்திற்கு நிச்சயமாக 70 பேரும் வருவார்கள் என நினைத்து அனைவருக்கும் தடபுடலாக ஏற்பாடுகள் செய்துள்ளார்.

ஆனால் அலுவலக நண்பர் ஒருவரைத் தவிர வேறு யாரும் திருமணத்திற்கு வரவில்லை.

இவ்வளவு செலவு செய்து ஏற்பாடு செய்து, யாரும் வராததால் உறவினர்கள் மற்றும் மாப்பிள்ளை வீட்டார் முன்னிலையில் அவருக்கு அவமானம் ஏற்பட்டுள்ளது.

இதனால் கடும் கோவத்திற்கு ஆளான ஹூசியூன் திருமண லீவ் முடிந்து ஆபீஸ் போகும்போது கையில் ராஜினாமா கடிதத்தோடு சென்றுள்ளார்.

மேலும் அவர் ராஜினாமா கடிதத்தில் உங்களுக்கு ஏற்பட்ட இரங்கலுக்கு வருத்தம் என்பதுபோல் குறிப்பிட்டு இரங்கல் கடிதம்போல் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்துள்ளார்.

RELATED ARTICLES

Most Popular