Saturday, May 28, 2022
HomeNews and Viewsஇந்தியச் செய்திகள்சீனியர் சிட்டிசன்களுக்கு இலவச ஏசில் ரெயில் பயணம்.. கெஜ்ரிவால் அறிவிப்பு!

சீனியர் சிட்டிசன்களுக்கு இலவச ஏசில் ரெயில் பயணம்.. கெஜ்ரிவால் அறிவிப்பு!

தேர்தல் நேரங்களில் ஒவ்வொரு கட்சியினைச் சார்ந்தவர்களும் வாக்குறுதிகள் கொடுப்பது வழக்கம்.

அந்தவகையில் பஞ்சாபில் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி- காங்கிரஸ் கட்சிகள் போட்டியிடுகின்றன.

ஒவ்வொரு கட்சியும் தங்களது வாக்குறுதிகளை வாரி இறைத்து வருகிறார்கள். ஆம் ஆத்மி தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக ஆட்சிக்கு வந்தால் 60 வயது மேற்பட்டோருக்கு புனித தலங்களுக்கு ஏசி ரெயில்களில் இலவச பயணம் என்று அறிவித்துள்ளனர்.

அதாவது ஆம் ஆத்மி கட்சியின் கெஜ்ரிவால் நேற்று செய்தியாளர் சந்திப்பில், “குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி வெற்றி வாகை சூடினால் 60 வயது மேற்பட்டோருக்கு புனித தலங்களுக்கு ஏசி ரெயில்களில் இலவசமாக அழைத்துச் செல்லப்படும்.” என்று கூறியுள்ளார்.

இந்த செய்தியினைக் கேட்ட சீனியர் சிட்டிசன்கள் படு குஷியில் உள்ளனர், இந்த தேர்தல் வாக்குறுதியானது முதியவர்களின் ஓட்டினை சேகரிக்கும் என்று தெரிகின்றது.

RELATED ARTICLES

Most Popular