முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்மோகன் சிங் மூச்சுத் திணறல் மற்றும் நெஞ்செரிச்சல் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மன்மோகன் சிங் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மன்மோகன்சிங் கடந்த 2009ல், இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இந்நிலையில் கடந்த 3 நாட்களாக காய்ச்சல் மற்றும் மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.திடீரென உடல் சோர்வு அடைந்ததையடுத்து டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.