Tuesday, September 27, 2022
HomeEvents-நிகழ்வுகள்தெல்லிப்பழையில் சிவமகாராசாவின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

தெல்லிப்பழையில் சிவமகாராசாவின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், நலன்புரிச் சங்கத்தின் ஸ்தாபகருமான மாமனிதர் சி.சிவமகாராசாவின் 16 ஆவது ஆண்டு நினைவேந்தல் தின நிகழ்வு நாளை மறுதினம் சனிக்கிழமை(20.8.2022) காலை-9 மணி முதல் தெல்லிப்பழைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெறும்.

தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் ந.உமாகரன் தலைமையில் இடம்பெற உள்ள குறித்த நிகழ்வில் யாழ்.மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் பிரதம விருந்தினராகவும், முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தன், வடக்கு மாகாண ஓய்வுநிலை மேலதிகக் கல்விப் பணிப்பாளர் திருமதி.பி.செல்வின், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறை திட்டமிடல் பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளர் சு.கபிலன், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் ச.ரதிகுலன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ள உள்ளனர்.

இதேவேளை, மேற்படி நிகழ்வில் கூட்டுறவாளர் கெளரவிப்பும், விருது வழங்கலும், பணியாளர் கெளரவிப்பும் இடம்பெறும். நினைவுரையை வலிகாமம் கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் பா.மகாலிங்கசிவம் நிகழ்த்துவார்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular